பெண்ணை நோக்கி சுட்டவரையே கொலை செய்த துப்பாக்கி தோட்டா! பகீர் சம்பவம்
டெக்ஸாசில் பெண்ணை கொல்ல அவரது கழுத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டவர் மீதே அந்த குண்டு பாய்ந்து உயிரிழந்திருக்கிறார்.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமையன்று (30-07-2022) காலை 11.39 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
டெக்ஸாசின் டல்லாஸ் பகுதியில் உள்ள மெடிக்கல் மாவட்டத்தில் 26 வயதான ப்ரையன் ரெட்மான் என்ற நபர் அதேப்பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கும் பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அந்த குண்டு பெண்ணின் கழுத்தில் பாய்ந்து, அவர் கத்தத் தொடங்கியிருக்கிறார்.
இதனால் அதே குண்டு ரெட்மானின் காலில் பாய்ந்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தகவலறிந்த பொலிஸார் அபார்ட்மெண்ட் இருக்கும் இடத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு எவரும் இல்லாமல் இருந்திருக்கிறது.
The preliminary investigation determined at the apartment, the male, Byron Redmon, 26, shot the adult female victim in the neck. The bullet then exited and hit Redmon in the leg. Redmon died at the hospital.
— Dallas Police Dept (@DallasPD) July 31, 2022
The investigation is ongoing under case number 137373-2022 https://t.co/rVDhHN0sM6
ஆனால் ரத்தக் காயங்கள் இருந்ததால் அவ்விடத்தில் நோட்டமிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அருகே இருந்த பார்க்லேண்ட் வைத்தியசாலையில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.
அங்கு ரெட்மானும் அந்த பெண்ணும் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், ரெட்மான் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் மற்றும் படத்தை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.
இந்த ஜோடி தெரிந்தவர்கள்தானா அல்லது துப்பாக்கிச் பிரயோகம் சம்பவத்தை ஒற்றிய சூழ்நிலைகள் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அப்பார்ட்மெண்ட்டை சுற்றிய பகுதிகளில் ரத்தக்காயம் இருந்தது, பெண்ணின் கழுத்தில் ஏற்பட்டுள்ள காயம் மற்றும் ரெட்மானின் கால் காயத்திற்கு அதே புல்லட் காரணம் என்பது டல்லாஸ் பொலிஸாருக்கு தெளிவடையச் செய்திருக்கிறது.
இச் சம்பவம் குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ள போலீசார்,
வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற சொற்றொடருக்கு உதாரணமாக இது அமைந்திருக்கிறது என்கிறார்கள். அதாவது கர்மா இஸ் பூமராங் போல இருக்கிறது.