2023 இல் இதெல்லாம் நடக்கும்; பகீர் கிளப்பிய பாபா வங்கா கணிப்பு!
பல்கேரிய பிரபல பாபா வாங்கா இந்தாண்டு நடக்கவிருப்பதை பூமியில் என்ன நடக்கும் என்பது குறித்த இவரது கணிப்புகள் அப்படியே துல்லியமாக நடந்துள்ளன.
அதுவும் ஏதோ சிறு கணிப்புகள் ஒன்றும் அப்படியே நடக்கவில்லை.. இரட்டை கோபு தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடங்கி பல்வேறு சர்வதேச விஷயங்கள் இவரது கணிப்பில் இருந்து அப்படியே நடந்துள்ளது.
இதன் காரணமாக பாபா வாங்காவின் கணிப்புக்கள் பிரபல்யம் அடைந்து வருகின்றது.
யார் இந்த பாபா வங்கா?
பல்கேரியா நாட்டில் 1911 முதல் 1996ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர் பாபா வாங்கா(81). இவருக்கு 12 வயது இருந்த போது, பெரிய புயலில் மர்மமான முறையில் பார்வை பறிபோனது.
அதற்குப்பின் எதிர்காலத்தைப் பார்க்கும் அரிதான சக்தி இவருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. வரும் காலத்தில் பூமியில் என்ன நடக்கும் என்பது குறித்த இவரது கணிப்புகள் அப்படியே நடந்துள்ளது.
ஏதோ சிறு கணிப்புகள் ஒன்றும் அப்படியே நடக்கவில்லை.
2023 இல் என்ன நடக்கும்?
இந்நிலையில், 2023இல் பூமியின் சுற்றுப்பாதை மாறும் என்றும் இதனால் புவி ஈர்ப்பு விசை மாறி வேறு சில பாதிப்புகளும் ஏற்படும் எனவும் பாபா வங்கா கணித்துள்ளாராம். அடுத்து இந்தாண்டு ஒரு முக்கிய நாடு பயோவீபன் சோதனைகளை நடத்தும்.
இதனால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் ஆய்வகங்களில் பிறக்கும் சூழல் உருவாகும்
அதுமட்டுமல்லாது அணுமின் நிலையம் வெடிப்பு காரணமாக ஆசியா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படலாம் என்றும் முக்கியமாக, குழந்தைகள் ஆய்வகங்களில் பிறக்கும் சூழல் உருவாகும் என்றும் பாபா வங்கா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அதில் குழந்தைகளின் தோற்றம் மற்றும் குணாதிசயங்களை நம்மால் மாற்ற முடியும் என கணித்துள்ள அவர் இது குழந்தை பிறக்கும் நடைமுறைகளையே முற்றிலுமாக மாற்றியமைக்கும் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவார்கள் என்றும் அந்நிய படையெடுப்பால் பல லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் பாபா வங்கா கணித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை EctoLife எனும் பெர்லினை தளமாகக் கொண்ட நிறுவனம் உலகின் முதல் செயற்கை கருப்பை முறையில் குழந்தையை உருவாக்கி வளர்க்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது.
அதேசமயம் தாயின் கருவறை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் இந்த கருப்பை வசதி மூலம் ஒரு வருடத்திற்கு 30,000 குழந்தைகளை உருவாக்க முடியும் என்றும் அந்நிறுவன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.