மதுபானசாலைக்கு அருகில் அரங்கேறிய கொடூரம் ; தீவிரமாகும் விசாரணை
மதுரட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானகொல பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலை ஒன்றிற்கு அருகில் ஏற்பட்ட தகராறில் மரப்பலகை ஒன்றினால் தாக்குதலுக்குள்ளாகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் மானகொல, ஏலமுல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் காணப்பட்ட தனிப்பட்ட கோபமே இந்த கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மரப்பலகை ஒன்றினால் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நபர் ரிக்கில்லகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலையுடன் தொடர்புடைய ஏலமுல்ல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மதுரட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.