பொலிஸ் பொறுப்பதிகாரி மீது கொடூர தாக்குதல்! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
அம்பாறை - பதியத்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதியத்தலாவ, சரணகம பகுதியில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் மற்றைய தரப்பினர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தாக்கிய சந்தேக நபர் மஹியங்கனை பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.