பொலிஸார் கண் முன்னே நடந்தேறிய கொடூரம் ; துடிதுடித்து பிரிந்த இரு உயிர்கள்
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் காதலுக்கு ஆதரவு தெரிவித்த இருவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி புதிய டவுன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜெய்பீம் நகரில் வசிப்பவர் நந்தீஸ் (வயது 25). இதேப்பகுதியை சேர்ந்தவர் சிருஷ்டி (22) காதல் ஏற்பட்டுள்ளது.

குடும்பத்தினரும் எதிர்ப்பு
இவர்களின் காதலை 2 பேரின் குடும்பத்தினரும் எதிர்த்துள்ளனர். இதனால், காதல் ஜோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறினர். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் மாலை காதல் ஜோடி பத்ராவதி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த 2 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். அப்போது, 2 பேரின் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், சிருஷ்டியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் கோபமடைந்தனர்.
அப்போது அவர்கள், திடீரென நந்தீசுக்கு ஆதரவாக பேசிய அவரது உறவினர்களை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதனை பார்த்த பொலிஸார் அவர்களை தடுக்க முயன்றனர். ஆனாலும் அவர்களால் தடுக்க முடியவில்லை.
இதையடுத்து அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
பின்னர், போலீசார் சிருஷ்டியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 5 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.