யாழில் சகோதரர்கள் முரண்பாடு; வர்த்தக நிலையத்தை நொருக்கிய காவாலிகள்
யாழ்ப்பாணம், கல்வியங்காட்டு பகுதி வர்த்தக நிலையமொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் வர்த்தக நிலைய உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பொலிஸார் கூறிய தகவல்
நேற்றிரவு மூவர் அடங்கிய வன்முறை கும்பலொன்று கடைக்குள் புகுந்து கண்ணாடி அலுமாரி, சோடா போத்தல்கள் என்பவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். அத்துடன் , கடை உரிமையாளரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
உரிமையாளருக்கும் அவரது சகோதரருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.