மனநோயாளியால் சகோதர சகோதரிக்கு நேர்ந்த சோகம்
எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெந்தகமுவ பகுதியில் இரட்டைக் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கொலைகள் நேற்று (07) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் எஹலியகொட பிரதேசத்தில் வசிக்கும் 73 வயதுடைய ஆணும் 57 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவர்கள் சகோதர சகோதரிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரட்டை கொலை
உயிரிழந்தவரின் மகனால் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்களை அந் நபர் தாக்கி இந்த இரட்டை கொலைகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
30 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு எஹலியகொட ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் முன்னிலை படுத்தப்பட்ட நிலையில் சிறைச்சாலை ஊடாக அவரை மனநல மருத்துவரிடம் முன்னிலை படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.