சார்ஜ் போடுவதில் சகோதரியுடன் ஏற்பட்ட முரண்பாடால் சகோதரன் எடுத்த விபரீத முடிவு
மட்டக்களப்பு மாவட்ட உன்னிச்சை நெடியமடு பகுதியில் கூலி வேலைக்கு சென்று வரும் 17 வயது இளைஞன் ஒருவன் தொடர்ந்து கைப்பேசி பயனாளராக இருந்து வந்துள்ளார்.
சகோதரி மட்டக்களப்பிலுள்ள கடையொன்றில் விற்பனையாளராக தொழில் புரிகிறார். கடந்த சில தினம் மாலை 07.00 மணியளவில் சகோதரி வேலை முடிந்து வீடு வந்ததும். தனது கைப்பேசியை Charge பண்ண சென்ற போது. இவரது சகோதரன் இவரை தடுத்து “என்னுடைய கைப்பேசியை சார்ஜ் போட்டிருக்கிறேன். நீ பிறகு போடு ” என்றிருக்கிறார்.
இதனால் கோபமடைந்து சகோதரன் சகோதரியை தாக்கிவிட்டு வீட்டின் அறைக்குள் சென்று அங்கிருந்த கிருமி நாசினியனை குடித்து மரணித்துள்ளார். இதனையடுத்து ஆயித்தியமலை பொலிசாருடன் சென்ற. பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர் விசாரணைகளை முன்னெடுத்து.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.