தம்பியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரமாக கொன்ற அண்ணன்!
அக்குரஸ்ஸ மாதொல பிரதேசத்தில் தம்பியை கூரிய ஆயுதத்தால் தாக்கி அண்ணன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நோற்றைய தினம் இரவு (10-09-2022) இடம்பெற்றுள்ளது.
அலுபோமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு கொலைச் செய்யப்பட்டுள்ளர்..
நேற்று இரவு குறித்த நபர் தனது மனைவியுடன் பெற்றோர் தங்கியிருந்த வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அவரது மூத்த சகோதரர் மேலும் 3 பேருடன் அந்த வீட்டில் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அங்கு இருவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறி சென்றதையடுத்து மூத்த சகோதரர் கூரிய ஆயுதத்தால் அந்த நபரை தாக்கியுள்ளார்.
படுகாயமடைந்த நபர் ஆதபான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.