அண்ணனை கொடூரமாக அடித்து கொன்ற தம்பி ; விசாரணையில் வெளியான தகவல்
பாணந்துறை, பின்வத்தை, மீகஹ பிரதேசத்தில் தனது அண்ணனை அடித்து கொலை செய்ததாக கூறப்படும் தம்பி பின்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) இரவு இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
பின்வத்தை, மீகஹ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய அண்ணனே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தையடுத்து சந்தேக நபரான தம்பி பின்வத்தை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில் உடனடியாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.