இலங்கையில் பெரும் சோகம் - அண்ணனும் தங்கையும் பரிதாபமான பலி
மாத்தளையில் மின்னல் தாக்கல் காரணமாக இளவயது அண்ணனும் தங்கையும் உயிரிழந்துள்ளனர்.
இந்த அனர்த்தம் இரத்தோட்டை, வெல்ஹாலயாய பகுதியிலேயே நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
23 வயதான அண்ணனும், 12 வயது தங்கையுமே உயிரிழந்துள்ளனர்.
இரு சடலங்களும் இரத்தோட்டை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
மின்னல் தாக்கம்
இதேவேளை, முல்லைத்தீவு – ஐயன்குளம் பகுதியில் நேற்று மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
ஐயன்குளம் பகுதியில் மரத்தின் கீழே நின்றிருந்தவர்களே மின்னல் தாக்கத்தில் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் ஐயன்குளம் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 40 வயது குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன், 39 வயதான மற்றொருவர் காயமடைந்துள்ளார்.