மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி... வசமாக சிக்கிய 5 பெண்கள்!
நுவரெலியா - பதுளை பிரதான வீதி அருகில் விடுதி ஒன்றில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றை நேற்று பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையின்போது, 5 பெண்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து குறித்த விடுதிக்கு பொலிஸார் ஒருவரை சிவில் உடையில் அனுப்பி உரிமையாளரிடம் பெண்களைப் பற்றி விசாரித்து ஒரு பெண்ணை தெரிவு செய்து பணம் செலுத்திய பின்னர் தாம் பொலிஸார் என அடையாளம் காட்டிய பின்னர் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்கள் 32 தொடக்கம் 47 வயதுக்கு இடைப்பட்ட வெலிமடை, மொனராகலை, கொழும்பு, அநுராதபுரம் மற்றும் மாத்தளை போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரையும் தடுத்து வைக்கப்பட்டு தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் அஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.