தியாகி திலீபனுக்கு வெண்கல சிலையா? விமல் வீரவன்ச கொதிப்பு!
விடுதலைப் புலிகளின் சக்திவாய்ந்த நாயகன் என்று கூறப்படும் தியாக தீபம் திலீபன் வெண்கலச் சிலையை யாழ்ப்பாணம் நல்லூரில் உருவாக்குவதற்கும், அந்தச் சிலைக்கு மாலைகள் சூட்டுவதற்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் விமல் வீரவன்ச கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கொழும்பில், வௌ்ளிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கண்டனம் தெரிவித்தார்.

தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் தற்போது வடக்கு கிழக்கில் அனுஸ்டிப்பட்டு வருகின்றது.
தமிழ் மக்களுக்காக தன்னுயிரை தியாக செய்த தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தமிழர் பகுதிகாளில் அனுஸ்டிப்பட்டு வருகின்றது.
அதுமட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும் தியாக தீபம் திலீபநின் நினைவேந்தல் அனுடிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.