பிரான்ஸ் தமிழர் ஒருவரின் திருமண வாழ்க்கையை கெடுத்த புரேக்கர்!
பிரான்ஸ் தமிழர் ஒருவரின் திருமணத்தை புரோக்கர் கெடுத்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்கு பிரான்ஸ் தமிழர் ஒருவர் பெண் பார்க்கும் படலத்தை புரோக்கர் ஒருவரிடம் கொடுத்துள்ளார்.
சில பல ஜாதகங்களின் பின்னர் ஒரு ஜாதகம் பொருந்தியுள்ளது. வயசு கொஞ்சம் குறைந்த படிப்பை முடித்த பிள்ளை… மாப்பிள்ளைக்கு பிடித்து போக சம்மதம் தெரிவித்துவிட்டார். மாப்பிள்ளை வீட்டில் பெண்ணை பார்த்து கொண்டாடி தமது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.
மாப்பிள்ளை தனது பக்க புரோக்கர் காசை ஏற்கனவே கொடுத்திருந்தார். ஆனாலும் பெண் வீட்டார் புரோக்கர் காசுக்கு தவணை சொல்லிகொண்டிருந்துள்ளனர்.
இவர்களுக்கு ஒரு பாடம் படிக்கிறேன் என்ற புறோக்கர் , பெண்ணுக்கு ஒரு காதல் முதலில் இருந்தது தெரியவரவே அது தொடர்பான சில படங்களை சேகரித்து எந்தவித முன்னறிவிப்புமின்றி பிரான்ஸ் மாப்பிள்ளைக்கு அவற்றை அனுப்பிவிட்டார்.
அதிர்ந்து போன மாப்பிள்ளை, ஊரில் தனது வீட்டில் தொடர்பு கொண்டு அங்கு இருக்கும் பெண்ணை கொண்டு போய் அவர்கள் வீட்டில் விட்டிட்டு வருமாறு பெற்றோருக்கு கூறியதை அடுத்து பெற்றோர் அப்பெண்ணை தாய் வீட்டில் கொ?ண்டு சென்று விட்டதாக தெரியவருகின்றது.