ரஜனியை சந்தித்த விக்கினேஸ்வரன் திருப்பி அனுப்பபட்ட சார்லஸ்; வெடித்தது புதிய சர்ச்சை!
அண்மையில் தமிழகம் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்கினேஸ்வரன் நடிகர் ரஜனி காந்தை சந்தித்திருந்தார். அதேசமயம் சார்லஸ் நிர்மலநாதனும் தமிழகம் சென்ற நிலையில், அங்குள்ள ஈழ ஏதிலிகளை சந்திக்க அனுமதி அவருக்கு மறுக்கப்பட்டிருந்தது.
மண்டபம் அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை கடந்த வியாழக்கிழமை(26.09.2023) அன்று சந்திக்க சென்றிருந்த போதே அங்குள்ள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் அகதிகளை சந்திப்பதற்கான வேண்டுகோள் தாயகத்தில் இருந்து விடுக்கப்பட்ட நிலையில் அவர் இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அங்குள்ள நடைமுறைகளை பின்பற்றி சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினரை தடுத்து நிறுத்திய விடயமானது, ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியையும், விசனத்தையும் உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில் பிரபல அரசயல் விமர்சகர் தோழர் பாலன்இது தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,
இருவரும் ஈழத் தமிழர்கள் ; ஒருவருக்கு அனுமதி ஒருவருக்கு மறுப்பு
இருவரும் ஈழத் தமிழர்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் விக்கினேஸ்வரன். இன்னொருவர் சார்லஸ் நிர்மலநாதன் ஒருவர் தமிழ்நாடு சென்று நடிகர் ரஜனியை சந்தித்தார்.
இன்னொருவர் தமிழ்நாடு சென்று ஈழத் தமிழ் அகதிகளை சந்திக்க முயன்றார். ஒருவருக்கு நடிகர் ரஜனியை சந்திக்க அனுமதி வழங்கிய தமிழக அரசு, இன்னொருவருக்கு அகதிகளை சந்திக்க அனுமதி மறுத்துள்ளது.
இங்கு விக்கினேஸ்வரன் ஏன் அகதிகளை சந்திக்கவில்லை என்று நான் கேட்கப்போவதில்லை. மாறாக, அகதிகளை சந்திக்க அனுமதி மறுப்பதற்கு ஒரு கண்டனத்தை ஏன் அவர் தெரிவிக்கவில்லை?
தமிழக முதல்வரிடம் சிங்கள மக்களுக்கும் அரிசி அனுப்புமாறு கேட்ட சுமந்திரன்கூட அகதிகளை சந்திக்க அனுமதி மறுப்பது தவறு என்று ஏன் அந்த தமிழக முதல்வரிடம் கூற முடியவில்லை?
எல்லாவற்றுக்கும் மேலாக, “ஈழத் தமிழர் அனாதைகள் இல்லை. அவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம்” என்று கூறிவரும் தமிழக முதல்வர் ஸடாலின் அகதிகளை சந்திக்க அனுமதி மறுப்பது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.