சினிமாவை மிஞ்சும் கடத்தல் கதை ; இந்திய விமான நிலையத்தில் சிக்கிய லண்டன் வாழ் இலங்கை வர்த்தகர்
இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச வானூர்தி நிலையத்தில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையை சேர்ந்த தனது நண்பரை சட்டவிரோதமாக லண்டனுக்கு அனுப்பி வைத்த குற்றத்துக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குறித்த லண்டனை சேர்ந்த இலங்கையர், இலங்கையை சேர்ந்த தமிழரான தமது நண்பருக்கு லண்டன் பயணத்திற்கான போர்டிங் பாஸ் என்ற வானூர்தி அனுமதி மற்றும் விசா ஆகியவற்றை வானூர்தி நிலையத்தின் கழிவறையில் வைத்து கையளித்துள்ளார்.

இதனையடுத்து அவரின் ஆவணங்களைப் பயன்படுத்தி, இலங்கையை சேர்ந்தவர் லண்டனுக்குப் புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில், லண்டனை சேர்ந்தவர் தனது ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாகக் கூறி, புதிய ஆவணங்களைப் பெற்று இலங்கைக்கு தப்பிக்க முயன்றுள்ளார்.
இதன்போது, சுமார் 8 மணிநேரம் வானூர்தி நிலையத்திலேயே காத்திருந்த அவரது நடவடிக்கைகள், அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
விசாரணைகளின் பின்னர் அவர் பெங்களூரு காவல்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை,லண்டன் சென்றடைந்த, அவருடைய நண்பரை அங்குள்ள அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.
அவர் விரைவில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.