இலங்கைக்கு வந்த பிரித்தானிய பிரஜைக்கு நேர்ந்த துயரம்
எல்ல மலைப் பகுதியில் நடை பயணம் செய்து தனது மகளின் 34 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய பிரித்தானிய பிரஜை திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவின் ஓக்பாத்தைச் சேர்ந்த 63 வயதான பிரட் மக்லீன் என்ற பிரித்தானிய பிரஜை, தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாடிய வேளை எல்லவில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை
குறித்த பிரித்தானிய பிரஜை கடந்த 16 ஆம் திகதி தனது மகள் நடாலி அன்னேவுடன் நாட்டுக்கு வருகை தந்து வெலிகமவில் தங்கியிருந்தார்.
பின்னர் இருவரும் 23 ஆம் திகதி எல்லவுக்குச் சென்று ஹோட்டலில் தங்கியுள்ளனர். இந்நிலையிலேயே, அவர் திடீரென உயிரிழந்தார். சம்பவத்தைத் தொடர்ந்து, பண்டாரவளை நீதவான் கெமுனு சந்திரசேகர, நீதவான் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
மேலும் உடலை பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
பதுளை போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் மரணத்துக்கான காரணம் திடீர் மாரடைப்பு என உறுதிப்படுத்தியது.
ரேவதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகும் சனி் ; இந்தராசிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட் ; உங்க ராசி இருக்கா?
தமிழர் பகுதியில் பல இலட்சம் பெறுமதியான வாயில்லா ஜீவன்களுக்கு நடந்த சம்பவம் ; ஏற்பட்ட பெரும் பாதிப்பு