குடிபோதையில் இலங்கை வந்த விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பிரித்தானியர்.!
அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து மீண்டும் அமெரிக்கா நோக்கி சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயற்சித்த வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பிரித்தானிய பிரஜையே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரித்தானிய பிரஜை குடிபோதையில் இவ்வாறு செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து விமானத்தின் சீட் பெல்ட்களை பயன்படுத்தி இலங்கைக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரித்தானியர், கொழும்பு அளுத்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு 25000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், விடுதலை செய்யப்பட்டுள்ளார்.