Wagner குழுவை பயங்கரவாதக் குழுவாக அறிவிக்கவுள்ள பிரிட்டன்
ரஷ்யத் துணை ராணுவப் படையான Wagner குழு வை பிரிட்டிஷ் அரசாங்கம் பயங்கரவாதக் குழுவாக வகைப்படுத்தவிருக்கிறது.
அதன்படி அந்தக் குழுவில் உறுப்பினராவதும் அதற்கு ஆதரவளிப்பதும் சட்டவிரோதம் ஆகும். அந்தவகையில் Wagner படையை பயங்கரவாதக் குழுவாக வகைப்படுத்தும் நகல் தீர்மானம் விரைவில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
Wagner குழு வன்முறைமிக்கது
பின்னர் அந்தப் படையின் சொத்துகள், பயங்கரவாத அமைப்புக்குச் சொந்தமானவையாக அறிவிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கபப்டுகின்றது.
அதேசமயம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் ராணுவப் படையான Wagner வன்முறைமிக்கது என்றும் அழிவை ஏற்படுத்தக்கூடியது என்றும் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் Wagner குழு உக்ரேனிலும் ஆப்பிரிக்காவிலும் அது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் அவர் கூறினார்.