திடீரென இடிந்து விழுந்த பாலம்; அக்கரைப்பற்று-கல்முனை போக்குவரத்து துண்டிப்பு!
அம்பாறை ஓலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் இன்று (27) அதிகாலை உடைந்து விழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று-கல்முனை பிரதான பாதையின் போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த சில தினங்களாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளதுடன் பாரிய அழிவுகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.
போக்குவரத்துகள் தடை
இந்த நிலையில் அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியில் ஒலுவலில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் இடிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக அதன் ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.
வெள்ள நீரோட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக பாலம் இடிந்து வீழ்ந்ததாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குறித்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் அப்பகுதியினால் செல்லும் மக்களை விழிப்பூட்டிவருவதுடன் குறித்த பாலத்தினை கடக்கும் மக்களுக்கு உதவியும் வருகின்றனர்.
மேலும் பாலம் உடைந்துள்ளதன் காரணமாக, அத்ந் வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.