மணமகன் கண்ணாடியால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்; உறவினர்கள் ஏமாற்றம்
பல்வேறு விடயங்களுக்காக திருமண நின்று போன ஏராளமான சம்பவங்கள் உலகில் இடம்பெற்றுள்ளன. ஆனால் மணமகன் கண்ணாடி அணிந்திருந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்தியாவின் நடந்தேறியுள்ளது.
பீகாரில் கண் குறைபாடு உள்ள ஒருவர் தனது குறைபாட்டை மறைத்து திருமணம் செய்ய முயன்றபோது, திருமண மேடையில் அவர் தடுமாறியதை அடுத்து மணப்பெண் அவரது குறையை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமண மேடையில் தடுமாறிய மணமகன்
பீகார் மாநிலத்தில் கண்ணில் குறைபாடு இருப்பதை மறைத்த மணமகன், குறைபாட்டை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற தைரியத்தில் கண்ணாடி அணிந்து வந்துள்ளார்.
அப்போது திருமண மேடையில் அவர் தடுமாறியதை அடுத்து மணமகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து மணமகள் மற்றும் அவரது வீட்டார் மணமகனிடம் விசாரித்த போது, தனக்கு கண் குறைபாடு இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து மணமகன் வீட்டார் எவ்வளவோ சமாதானம் செய்தும் மணமகள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் மணமகனுக்கு ஒரு கண்ணில் பார்வை குறைபாடு இருப்பதை அறிந்த மணமகள், திருமணத்தை நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.