சாரதியிடம் கைநீட்டிய பொலிஸார் நால்வருக்கு நேர்ந்த கதி!
லொறிச் சாரதி ஒருவரிடம் 12,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று (27) முதல் குறித்த உத்தியோகஸ்தர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 20ஆம் திகதி கந்தகெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவந்தன பிரதேசத்தில் லொறி ஒன்றை நிறுத்தி12,000 ரூபாவை இவர்கள் இலஞ்சமாகப் பெற்றுள்ளனர்.
சட்ட நடவடிக்கை
அதன் குறைபாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அவர்கள் இவ்வாறு லஞ்சம் பெற்றுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பதுளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி. எம். ஜயரத்ன சந்தேகநபர்களை பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார்.