சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள்
இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று (14) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சீதுவை - ரத்தொலுகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
3 ஆயிரம் ரூபா இலஞ்சம்
கைதுசெய்யப்பட்டவர் ரத்தொலுகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆவார்.
போக்குவரத்து விதி மீறல் குற்றத்திற்காக முறைப்பாட்டாளரின் வாகன அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொண்டு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக முறைப்பாட்டாளரிடம் 3 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று (15) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.