சிறைச்சாலைக்குள் நுழைந்து அச்சுறுத்தினால் எலும்புகளை முறித்துவிடுங்கள்!
இராஜாங்க அமைச்சர்கள் சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து கைதிகளை அச்சுறுத்தினால் அவர்களின் எலும்புகளை கைதிகள் முறிக்கவேண்டும் என முன்னாள் இராணுவதளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் மாநாட்டில் கல்லந்து கொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
லொகான் ரத்வத்தை போன்ற இராஜாங்க அமைச்சர்கள் சிறைக்குள் நுழைந்து சிறைக்கைதிகளை துன்புறுத்தினால் அவ்வாறு நடந்துகொள்பவர்களின் எலும்புகளை முறித்து விடுமாறு கைதிகளைவும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு தங்களை துன்புறுத்துபவர்களை கைதிகள் திருப்பி அடித்தால் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதிகளிற்காக குரல்கொடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லொகான் ரத்வத்தை ஒருமுறை நாடாளுமன்றத்திற்கு மதுஅருந்திவிட்டு வந்ததாகவும், நாடாளுமன்றத்தில் சத்தமிட்டு தவறான விதத்தில் நடந்துகொண்டதால் நான் அவரிடம் நீங்கள் மதுஅருந்தியுள்ளீர்களா என தான் கேட்டதாகவும் சரத்பொன்சேகா இதன்போது தெரிவித்துள்ளார்.