தமிழீழ தேசிய கொடியை அங்கீகரித்த கனடாவின் பிரம்டன் நகரம்
கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்துள்ளது. இதற்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.
இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்கான சான்றுப் பத்திரமும் கையளிக்கப்பட்டதுடன், கொடியும் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தமிழர்கள் புலிக்கொடி தினம்
இதேவேளை, மேயர் பற்றிக் பிரவுண் அங்கீரித்து வழங்கியுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் புலிக்கொடி தினத்தை நினைவுகூருகின்றனர்.
இந்த நாள் ஈழத்தமிழ் தேசத்தின்கூட்டு அடையாளத்தையும் 1930 களில் இருந்து தங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான அவர்களின் தொடர்ச்சியான எதிர்பார்ப்பையும் குறிக்கின்றது.
உலகளாவிய தமிழர் உரிமைகளின் குரல் என்பது தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிக்காக வாதிடுவதற்கும், தமிழ் வரலாற்றைப் பாதுகாப்பதற்கும், காப்பகப்படுத்துவதற்கும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மேம்படுத்துவதற்குமானதொரு அமைப்பாகும்.