காதலி வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த காதலன் ; இறுதியில் நடத்தப்பட்ட பெரும் கொடூரம், விசாரணை கொடுத்த அதிர்ச்சி
பெங்களூருவில் செவிலியர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடாக மாநிலம் பெங்களூருவில் ஜெயதேவ் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் 25 வயதான மம்தா என்பவர், ஸ்டாஃப் நர்ஸாக கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.

பொலிஸார் விசாரணை
இவர், குமாரசாமி லே-அவுட் பகுதியில் தனது தோழியுடன் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளார். மம்தா, தனது மருத்துவமனையில் ஆண் செவிலியராக பணியாற்றிய 39 வயதான சுதாகர் என்பவருடன் நட்பாக பழகியுள்ளார். நாளடைவில் இருவருக்கும் இடையிலான நட்பு காதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி தனது தோழி இரவு பணிக்கு சென்ற நிலையில், மம்தா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். காலையில் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாமல் இருந்ததால், வீட்டு ஓனர் ஜன்னலை திறந்து உள்ளே எட்டிப் பார்த்துள்ளார்.
அப்போது, செவிலியர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கடைசியாக அவரின் காதலன் சுதாகர் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. உடனே, அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது.
மம்தாவை சுதாகர் காதலித்து வந்தபோதும், அவருக்கு வேறொரு பெண்ணை பெற்றோர் பேசி முடித்துள்ளனர். வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்து, சுகாகருடன், மம்தா கடும் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதையடுத்து, சம்பவத்து அன்று மம்தா வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து சுதாகர் அங்கு சென்றுள்ளார். அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்ளும் படி மம்தா வற்புறுத்தியுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரமடைந்த சுதாகர் காய்கறி நறுக்க பயன்படுத்தப்படும் கத்தியை எடுத்து, மம்தாவின் கழுத்தை அறுத்து தப்பியோடியுள்ளார். இதில், இளம்பெண் துடிதுடித்து உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சுதாகரை கைது செய்த பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.