கேக் இற்குள் காதலன் மறைத்து வைத்த பொருள் ; காதலிக்கு இன்ப அதிர்ச்சி
காதலர்கள் தங்கள் துணையின் மனம் கவர்வதற்காக வித்தியாசமான வழிகளை கையாள்வார்கள்.
அந்த வகையில் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டுள்ளார்.
காதலிக்கு இன்ப அதிர்ச்சி
அதன்படி கேக் ஒன்றை தயாரித்து அதற்குள் தங்க மோதிரம் ஒன்றையும் வைத்துள்ளார். பின்னர் காதலியை வீட்டிற்கு வரவழைத்து கேக் கொடுத்துள்ளார். அதை வாங்கிய காதலி ஆசை ஆசையாக சாப்பிட்டுள்ளார்.
அப்போது அவரது வாயில் ஏதே வித்தியாசமாக கடிபடுவதை உணர்ந்தார். பின்னர் சுதாரித்து கொண்டு அதை வெளியே எடுத்து பார்த்த போது தான், தனது காதலர் இன்ப அதிர்ச்சியாக கேக்கில் மோதிரத்தை மறைத்து வைத்தது தெரிய வந்தது.
இதனால் அவரது காதல் முன்மொழிவு நிகழ்ச்சி கலகலப்பாக இருந்ததாக கூறிய வாலிபர் , இந்த சம்பவத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாக பரவியுள்ளது.