நண்பர்கள் குழுவுடன் சென்ற பாடசாலை மாணவனுக்கு நடந்த சம்பவம் ; பறிபோன உயிர்
செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுப்பில குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சோகமான சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
சம்பவம் குறித்து செவனகல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் தனது நண்பர்கள் குழுவுடன் இணைந்து கட்டுப்பில குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மாணவனின் சடலம் தற்போது எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் சடல அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் செவனகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.