விளையாட்டு வினையானதில் சிறுவன் உயிரிழப்பு
பாடசாலை சிறுவன் ஒருவர் வீட்டுக்கு அருகில் தேயிலைத் தோட்டத்தில் சவுக்கு மரத்தில் கயிறு கட்டி விளையாடிக் கொண்டிருந்த போது கயிறு கழுத்தில் இறுகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகஸ்தோட்ட பகுதியில் இன்றூ ஞாயிற்றுக்கிழமை பகல் 01 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
சிறுவன் உயிரிழப்பு
நுவரெலியா மாகாஸ்தோட்ட பகுதியில் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் வசித்து வருகின்றனர்.
மூத்த மகள் பல்கலைக்கழக படிப்புக்குச் சென்ற பின் வீட்டில் சிறிய மகள் தாய் மற்றும் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் என மூவர் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சிறுவன் சவுக்கு மரம் ஒன்றில் கயிறு கட்டி விளையாடி கொண்டிருந்துள்ளார்.
தாய் தனக்குத் தலைவலியென வீட்டில் படுத்து இருந்த நிலையில் சிறுவனை அவதானித்த அருகிலிருந்த வீட்டார் கூச்சலிட்டுள்ளனர்.
இதையடுத்து மரத்துக்கு அருகில் ஓடியவர்கள் சிறுவனை மீட்டனர் பின் அவசர அம்புயூலன்ஸ் வண்டி சம்பவ இடத்திற்கு வருகை தந்த வைத்தியர்கள் சிறுவனைப் பரிசோதித்த போது சிறுவன் உயிர் இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு நுவரெலியா பொலிஸார் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.