தாயின் தகாத உறவால் காதலன் வெறிச்செயல்; பறிபோன உயிர்
சென்னையில் கள்ளக்காதலியின் 10 வயது மகனை கழுத்த நெரித்து கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு ஒரு பிள்ளையின் தாயாரான பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனியாக வசித்து வந்த நிலையில், மற்றுமொருவருடன் தகாத உறவு ஏற்பட்டு இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இருவரிடையே அடிக்கடி தகராறு
தொடர்ந்து, கள்ளக்காதலன் வீட்டுக்கு சென்ற நிலையில் மது போதையில் பெண்ணை செல்போனில் அழைத்த காதலன் உனது மகனை கொலை செய்யப் போவதாக தெரிவித்துவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார். அதன் பின்னர், சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்ட தமிழ்ச்செல்வன் உனது மகனை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டுக்கு சென்று பார்த்த போது, 10 வயது சிறுவன் வீட்டில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவனின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த பெண்ணின் செல்போனுக்கு வேறு சிலர் தொடர்ந்து அழைத்து வந்ததனால், சந்தேகம் அடைந்த காள்ல காதலன் கண்டித்துள்ளார். இதில், அவர்களுடைய அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அதன்படி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருவரிடையே, ஏற்பட்ட தகராறை தொடர்ந்து , கோபமடைந்த ள கள்ளக்காதலன் , தனது கையையும் அறுத்துக் கொண்டார்.
பின்னர் வீட்டுக்கு சென்ற நிலையில், அங்கிருந்த சிறுவனை கொலை செய்து தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் காதலனை வலைவீசி தேடி வருகின்றனர்.