துப்பாக்கிச்சூட்டில் பலியான சிறுவன்: சம்பவம் தொடர்பில் வெளியான புதிய தகவல்
துப்பாக்கிச்சூட்டில் பலியான சிறுவன்: சம்பவம் வெளியான புதிய தகவல் வீரகெட்டிய - வெகந்தவெல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளதாக இலங்கையில் காவல்துறையின் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை வீரகெட்டிய - வெகந்தவெல பகுதியிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு பலியானதாக மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன் பலியான சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.