வவுனியா பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம்: சிசிரிவியில் சிக்கிய சிறுவன்!
வவுனியா மாவட்டம் தாண்டிக்குளம் பகுதி ஏ9 வீதியில் அமைந்துள்ள பிரமண்டு வித்தியாலயத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையில் திறன் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான தொலைக்காட்சி திருடப்பட்டுள்ளது.
திருட்டு இடம்பெற்றமை நேற்று (13-01-2024) கண்டறியப்பட்டமையினையடுத்து, பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நேற்று மாலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் பாடசாலைக்கு இன்று காலை விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன், பாடசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமரா காட்சியை பரிசோதனைக்குட்படுத்தினர்.
இதன்போதே கடந்த வெள்ளிக்கிழமை (12.01.2023) மதியம் 3.29 மணியளவில் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவர் தொலைக்காட்சியினை தூக்கிக்செல்வது சிசிரிவியில் பதிவாகியுள்ளது.
சிசிரிவி காட்சியின் உதவியுடன் அவ் சிறுவனை கண்டுபிடிப்பதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளளனர்.
பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை பாதுகாவலர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.