சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; துயரத்தில் அம்பாறை பிரதேசம்
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் மூன்று வயதுடைய ஆண் சிறுவனே நீர் குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிசிரிவி காணொளி - கொலை செய்யப்பட்டாரா?
வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சுமார் 3 மணித்தியாலமாக அப்பகுதியில் காணாமல்போன குறித்த சிறுவனை பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தேடிய நிலையில் சிறுவனின் வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக்காணியில் உள்ள பாதகாப்பற்ற நீர்க்குழிக்குள் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவத்தில் கிடைக்கப்பெற்ற சிசிரிவி காணொளி ஒன்றில் இனம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்த சிறுவனை அழைத்துச் செல்லும் காட்சி ஒன்றும் பதிவாகியுள்ளது.
எனினும் சிறுவனை அழைத்து சென்ற நபர் தெளிவாக அடையாளம் காண முடியாதுள்ளதாகவும் சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுவன் தவறி பாதகாப்பற்ற நீர்க்குழிக்குள் விழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.