சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சிறுவன் கைது
14 வயது சிறுவன் ஒருவன் 5 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதத்தில் குடும்ப தகராறு காரணமாக வலிபர் ஒருவரும் அவரது தம்பியும் தங்களுது அத்தை வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அதன்போது வீட்டிலிருந்த 5 வயது சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த திங்களன்று பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன் கூறியதாவது,
தனது பாடசாலையில் சில சாதாரண தர பரீட்சை வகுப்பு மாணவர்களின் ஆலோசனையின் பேரில், யூடியூப் மற்றும் ஏனைய இணையத்தளங்கள் போன்ற சமூக ஊடக தளங்களில் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை பார்க்க ஆரம்பித்ததாகவும், அதேவேளையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்ட பின்னர் ஆன்லைன் கல்வியை ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து காணொளியில் கண்ட காட்சிகளை குழந்தையிடம் பரிசோதனை செய்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதனைக்காக குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.