12 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை 15 வயது சிறுவன் ; இலங்கையில் சம்பவம்
மொனராகலை, தொம்பகஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலஓயா பஹத ஆராவ பகுதியில் வசிக்கும் 12 வயதுடைய சிறுவனை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்த 15 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் இரண்டு வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதுடன் தந்தை, ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இரத்தப்போக்கு
அவர்களது, 12, 9 மற்றும் 5 வயதுடைய மூன்று மகன்களும் தங்களது, பாட்டியின் பராமரிப்பில் இருந்துள்ளதுடன் தந்தை அருகில் உள்ள அவர்களின் வீட்டில் தங்கியிருந்து ஆடை தொழிற்சாலையில் வேலைக்கு சென்றுள்ளார்.
அத்துடன் குறித்த வீட்டில் தந்தையின் சகோதரியின் 15 வயதுடைய மகனும் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (05) அன்று இரவு, தந்தை வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த போது 12 வயதுடைய சிறுவன் அழுது கொண்டிருந்துள்ளதுடன் சகோதரியின் மகனான 15 வயதுடைய சிறுவனும் அருகில் இருந்துள்ளார்.
சிறுவனின் இரத்தப்போக்கு காரணமாக சிறுவன் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரான சிறுவனை கைது செய்வது தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.