வெளிநாட்டு பிரஜையின் 6 மில்லியனை அபேஸ் செய்த ஹோட்டல் முதலாளி!
வெளிநாட்டு பிரஜையின் 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹபராதுவ பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் ஹோட்டல் கணக்காளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோட்டலிலுள்ள பாதுகாப்பு பெட்டகத்தின் இரகசிய இலக்கத்தை பயன்படுத்தி, இந்த திருட்டு இடம்பெற்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.