பொரளை இரட்டைக் கொலை; வெளிநாட்டுக்கு தப்பியோடியவர் கைது
கொழும்பு - பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘சிறிசர உயன’ அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2025 ஒகஸ்ட் 07ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்திருந்தனர்.

பிரதான சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை
சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த குற்றச் செயலில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், வெளிநாட்டிலிருந்து நேற்று (22) அவர் நாட்டிற்கு திரும்பிய போது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது. மேலும் கொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.