கைதிகளுக்கும் பூஸ்டர் தடுப்பூசி!
கைதிகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கப்படுவதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொவிட் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் , இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்படும் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த தடுப்பூசியின் மூன்றாவது டோஸாக ஃபைசர் தடுப்பூசி 18,453 கைதிகளுக்கு வழங்கப்படுவதாக ஏகநாயக்க கூறியுள்ளார்.
அதன்படி கொழும்பு மாவட்டத்தில் உள்ள வெலிக்கடை, மெகசின், கொழும்பு விளக்கமறியல், வட்டரெக்க, மஹர மற்றும் நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளில் கட்டமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும் எதிர்வரும் நாட்களில் ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கும் தடுப்பூசி வழங்க எதிர்பார்க்கப்படுவதாக ஏகநாயக்க கூறியுள்ளார்.