வெளிநாட்டிலிருந்து கண்டியின் மற்றுமொரு பிரதேச செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
கண்டி - நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இதனையடுத்து இன்று (29) பிரதேச செயலக வளாகம், களஞ்சிய அறை உட்பட சகல பகுதிகளிலும் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டிலிருந்து குறித்த மின்னஞ்சல் வந்ததோடு, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வெடிகுண்டு வெடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாவலப்பிட்டி பொலிஸார், சிறப்புப் படை, இராணுவ வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு ஆகியோர் களஞ்சிய அறைகளைச் சரிபார்த்து சந்தேகத்துக்குரிய விதத்தில் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினர்.