வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற நான்கு பேரில் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!
வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற நான்கு பேரில் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததோடு, மேலும் மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் பொகவந்தலாவ மேல் பிரிவு தோட்ட பகுதியில் உள்ள 17ஆம் இலக்க வனப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் இன்று வெள்ளிகிழமை (01-07-2022) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
விறகு சேகரிக்க சென்றபோது மரத்தில் இருந்த குளவி கூட்டை, கழுகு மோதியமையினால் குளவிகள் கலைந்து வந்து தாக்கியுள்ளதோடு, அதில் ஒருவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் பொகவந்தலாவ கீழ் பிரிவு தோட்டத்தை சேர்ந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
[]
காயங்களுக்குள்ளான ஏனைய மூவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.