பொலிஸாருக்கு உடலில் அணியும் கெமராக்கள்
காவல்துறையினருக்கும் வாகன ஓட்டுநர்களுக்கும் இடையில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்காக, காவல்துறையினருக்கு உடலில் அணியும் கெமராக்கள் வழங்கப்படவுள்ளன.
பொதுத் தொடர்புகளின் போது தவறான நடத்தைகளைக் குறைக்கவும் இது உதவும் என்று கருதப்படுகிறது இதன்படி, இலங்கையின் காவல்துறை விரைவில் அனைத்துப் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உடலில் பொருத்தும் கெமராக்களை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பணியில் இருக்கும்போது அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்புகளை இந்த கெமராக்கள் பதிவு செய்யும்.
இது, கையூட்டல் மற்றும் ஊழலைத் தடுக்கும். அத்துடன் இரு தரப்பினரும் சட்டவிரோதமாகச் செயல்படுவதைத் தடுக்கும் என்று காவல்துறை ஊடகப்பேச்சாளர் எஃப். யு. வூட்லர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்துக் காவல்துறை தடுப்பு மையங்களிலும் காவல்துறை சிசிடிவி கெமராக்களை நிறுவவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.