தேனீர் கடை கதிரையில் அமர்ந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு
புறக்கோட்டை பிரதான பஸ் தரிப்பிட பகுதியின் தேனீர் கடை ஒன்றுக்கு அருகில் கதிரை ஒன்றில் அமர்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை பொலிசார் நேற்று (05) மாலை 04 மணியளவில் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளதாவது,

ஆரம்பக்கட்ட விசாரணை
சடலமாக மீட்கப்பட்ட நபர் பஸ் ஒன்றில் வருகை தந்ததாகவும்,சுகவீனமுற்ற நிலையில் இவரை புறக்கோட்டை பிரதான பஸ்தரிப்பிடத்தில் பஸ் நடத்துனர் ஒருவர் இறக்கிவிட்டு சென்ற நிலையில் குறித்த நபர் தடுமாற்றத்துடன் தேனீர் கடை ஒன்றின் அருகில் காணப்பட்ட கதிரையில் அமர்ந்தவாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை டாம் வீதி பொலிஸார் மேற்கொண்டு வரும் அதேவேளை உயிரிழந்த நபரின் ஊர்,பெயர் போன்ற தகவலை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.