மவுசாகலை நீர்த்தேக்கத்தில் வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்பு
மஸ்கெலியா மவுசாக்கலை நீர்த்தேக்கம் பகுதியில் இன்று (01) மாலை 4 மணியளவில் வயது முதிர்ந்த பெண் ஒருவரின் சடலம் நீரில் மிதந்து வருவதை பொதுமக்கள் கவனித்து, மஸ்கெலியா பொலிஸ் நிலையம் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர்.
மேலதிக விசாரணை
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம், 86 வயதுடைய காட்டு மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் லெட்சுமி என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஹட்டன் நீதிமன்றம் நீதிவானின் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், பின்னர் உடற்கூறு பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு உடல் அனுப்பப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.