இலங்கைக்கு நாளை வரவுள்ளது பிரியந்த குமாரவின் சடலம்
பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள விளையாட்டு ஆடை தொழிற்சாலையின் பொது முகாமையாளர் பிரியந்த குமார என்பவர் தாக்கி கொல்லப்பட்ட எரியூட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த பிரியந்த குமாரவின் சடலம் நாளைய தினம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. பாகிஸ்தான், பஞ்சாப் மாநில அரசின் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளை காலை 10 மணியளவில் லாஹூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தில் அவரின் சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 124 சந்தேக நபர்களில் 13 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.