காட்டு பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்
ஹொரவபொத்தானை காட்டு பகுதியில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஹொரவபொத்தானை நிகவெவ பிரதேசத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 5 அடி 9 அங்குல உயரம் கொண்டவர் என்றும் 55 முதல் 60 வயது மதிக்கத்தக்கவர் என கூறப்படுகின்றது.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய நிகவெவ பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சமபவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.