கண்டி முத்துகெலியாய குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
கண்டி - தலாத்து ஓயா காவல்துறை பிரிவுக்குட்பட்ட முத்துகெலியாய குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
27 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலமே இன்று இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலாத்து ஓயா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக குறித்த இளைஞர் காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலாத்து ஓயா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.