களுத்துறை ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் மீட்கப்பட்ட சடலம்
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெட்டுமகட பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளது. களுத்துறை, வெட்டுமகட பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் நபரொருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த நபரை நாகொடை வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கனமே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர் களுத்துறை தெற்கு, நாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அத்துடன் சம்பவ இடத்திற்கு அருகில் வைத்து கையடக்கத் தொலைபேசி மற்றும் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.