அம்பாறை சிகை அலங்கார நிலையத்தில் கிடந்த சடலம்; கொலையா? பொலிஸார் குழப்பம்
அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினையடி சந்தி பகுதியில் உள்ள சிகை அலங்கார கடையொன்றில்சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது .
3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் கதிரை ஒன்றில் அமர்ந்த நிலையில்சடலம் ஒன்றை பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று (15) மாலை சம்மாந்துறை பொலிஸார் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொலையா அல்லது தற்கொலையா?
சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் என்பதுடன் உயிரிழந்தவர் வாடகை கடையில் சிகை அலங்கார கடை நடத்தி வந்தவர் என கூறப்படுகின்றது.
உயிரிழந்தவர் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியை சேர்ந்தவர் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபர் வேலையின் நிமித்தம் சிகை அலங்கார கடை வேலைகளை முடித்து கடையறைக்குள் இரவு தூக்கத்தை கழிப்பவர் என தெரிய வந்துள்ளது.
இவ்வாறான நிலையில் அவர் உயிரிழந்தமை மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.