வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் உடலில் இத்தனை மாற்றங்களா?
பூண்டு நம் உணவுமுறையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும். பல நூற்றாண்டுகளாக பூண்டு நமது உணவுகளில் மட்டுமின்றி மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூண்டு இயற்கையாகவே மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் நம்ப முடியாத மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த எளிய வழக்கம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் நேர்மறையான தாக்கத்தை உருவாக்கக்கூடும். அவை என்னென்ன என்று நாம் இங்கு பார்ப்பபோம்.
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்
தினமும் வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிடத் தொடங்கும் போது ஏற்படும் மாற்றங்களில் முதன்மையானது, நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதுதான். ஏனெனில் பூண்டில் பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும் அல்லிசின் என்ற சக்திவாய்ந்த கலவை உள்ளது. எந்த பருவமாக இருந்தாலும், பூண்டு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க உதவும். இதை இயற்கையின் மினி ஆண்டிபயாடிக் என்று அழைக்கப்படுகிறது.
இதயத்தை பாதுகாக்கும்
உங்கள் இதயத்தை சிறப்பாக பராமரிக்க விரும்பினால், பூண்டு உங்களின் ஆசையை நிறைவேற்றும். இது உடலில் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும், உங்கள் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கவும் உதவும். இது உங்கள் இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும், அடைபட்ட தமனிகளின் அபாயத்தைக் குறைக்கவும் மறைமுகமாக உதவுகிறது.
செரிமானத்தை ஊக்குவிக்கிறது
உங்களுக்கு செரிமானப் பிரச்சினைகள் உள்ளதா? பூண்டு அந்த சிக்கலை சரிசெய்யக்கூடும். காலையில் வெறும் வயிற்றில் பூண்டை உட்கொள்வது பித்த உற்பத்தியைத் தூண்டுகிறது, இது கொழுப்புகளை உடைத்து உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு வழிவகுக்கிறது. இது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களிலிருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இது உங்கள் உடலுக்கு நிதானமான ஆனால் பயனுள்ள நச்சு நீக்கத்தை அளிக்கிறது. காலப்போக்கில் இது தெளிவான சருமத்தையும் அளிக்கிறது.
இரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்துகிறது
உங்கள் இரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்தால் அல்லது உங்கள் குளுக்கோஸ் அளவை சீராக்க விரும்பினால் பூண்டு அதற்கு உதவக்கூடும். அதன் இயற்கையான சேர்மங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தவும் உதவும், குறிப்பாக வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும்போது இந்த திறன் அதிகரிக்கும். தொடர்ந்து இந்த வழக்கத்தை கடைபிடிக்கும் போது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
எடையை நிர்வகிக்கும்
பூண்டு நேரடியாக எடையைக் குறைக்காது, ஆனால் எடையைக் குறைக்கும் முயற்சியில் பூண்டு நிச்சயம் உதவிகரமாக இருக்கும். இது பசியைக் கட்டுப்படுத்துகிறது, வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது மற்றும் உடலில் நீர் தக்கவைப்பைக் குறைக்கிறது. எனவே உங்கள் எடையைக் குறைக்க டயட்டை பின்பற்றுகிறீர்கள் என்றால், பூண்டு உங்களின் முயற்சிக்கு ஆதரவளிக்கும்.