இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து மீட்கப்பட்ட சடலங்களால் அதிரும் கொழும்பு!
கொழும்பில் இன்று மாத்திரம் இதுவைரையில் மூன்று மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று முற்பகல் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையோரங்களில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் அவை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது கொலன்னாவ பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அருகில் உள்ள எண்ணெய் கால்வாயில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.
அதேசமயம் , மீட்கப்பட்ட குறித்த முன்று சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி
கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதியில் சடலங்கள் மீட்பு!